உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அபாயகரமான வளைவில் ரோடு டிவைடர் அமைப்பு

அபாயகரமான வளைவில் ரோடு டிவைடர் அமைப்பு

வாழப்பாடி: 'காலைக்கதிர்' செய்தி எதிரொலியாக, வாழப்பாடி-தம்மம்பட்டி சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயகரமான சடையன் செட்டி ஏரி பாலத்தில், 'ரோடு டிவைடர்' அமைக்கப்பட்டுள்ளது. வாழப்பாடியில் இருந்து சிங்கிபுரம், திம்மநாயக்கன்பட்டி, மல்லியகரை வழியாக தம்மம்பட்டி செல்லும் பிரதான சாலை அமைந்துள்ளது. அச்சாலை, உப்பிலியாபுரம், துறையூர் வழியாக தம்மம்பட்டியை, திருச்சியுடன் இணைக்கும் சாலையாகவும் விளங்கி வருகிறது. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த வாழப்பாடி-தம்மம்பட்டி சாலையில், வாழப்பாடி அடுத்த புதுப்பாளையம் சடையன் செட்டி ஏரியின் மறுகால் வாய்க்காலின் குறுக்கே, அபாயகரமான வளைவில் குறுகலான தரைப்பாலம் அமைந்திருந்ததால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. எனவே, அபாயகரமான வளைவில் அமைந்துள்ள பாலத்தை கடந்து செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதை தவிர்க்க, அப்பகுதியில் ரோடு டிவைடர் அமைக்க வேண்டும் என, 'காலைக்கதிர்' நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, அந்த இடத்தில் 'ரோடு டிவைடர்' அமைக்கப்பட்டுள்ளது. அதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை