மாணவிக்கு தொந்தரவு; தொழிலாளிக்கு காப்பு
மேட்டூர்: மேட்டூர், ராமன் நகர் அடுத்த ஆண்டிக்கரையை சேர்ந்த, கட்டட தொழிலாளி நந்தகுமார், 27. இவர், 14 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். சிறுமி புகார்படி, மேட்டூர் மகளிர் போலீசார், நேற்று போக்சோ சட்டத்தில் நந்தகுமாரை கைது செய்தனர்.