உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தீவட்டிப்பட்டி கலவர விவகாரம் அ.தி.மு.க.,- பா.ம.க., நிர்வாகிகளுக்கு வலை

தீவட்டிப்பட்டி கலவர விவகாரம் அ.தி.மு.க.,- பா.ம.க., நிர்வாகிகளுக்கு வலை

ஓமலுார்: தீவட்டிப்பட்டி கலவரத்தில் தொடர்புடைய, அ.தி.மு.க., - பா.ம.க., நிர்வாகிகளை தனிப்படை போலீசார் தேடுகின்றனர்.சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா, தீவட்டிப்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஒரு பிரிவினர் வழிபட, மற்ற பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பிடையே கலவரம் ஏற்பட்டது. இதில் முதல் கட்டமாக, 28 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். அப்பகுதியில் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் கலவரத்தின் போது ஒரு கடை முன், இருசக்கர வாகனத்தில் சில இளைஞர்கள், சிறு பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி பெட்ரோல் குண்டு தயாரித்த வீடியோ, தற்போது பரவி வருகிறது. இதன் அடிப்படையில் குண்டு வீசியவர்களை, போலீசார் தேடுகின்றனர்.இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் கூறுகையில், ''கலவரத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படும் அ.தி.மு.க.,வை சேர்ந்த, காடையாம்பட்டி மாணவரணி ஒன்றிய செயலர் விஜயன், மற்றொரு தரப்பில் பா.ம.க.,வை சேர்ந்த காடையாம்பட்டி ஒன்றிய செயலர் வெங்கடேஷ் தலைமறைவாக உள்ளனர். இருவரையும் தனிப்படை போலீசார் தேடுகின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்