உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தி.மு.க., நிர்வாகிகளுக்கு மா.செ., ஆலோசனை

தி.மு.க., நிர்வாகிகளுக்கு மா.செ., ஆலோசனை

சேலம் : கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில், தி.மு.க., போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாழப்பாடியில் உள்ள சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், நேற்று காலை ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலர் சிவலிங்கம் தலைமை வகித்து உரிய ஆலோசனை வழங்கினார். வீரபாண்டி, ஏற்காடு, ஆத்துார், கெங்கவல்லி சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஒன்றிய செயலர்கள், பேரூர் செயலர்கள், தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், பூத் கமிட்டி முகவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.அதேபோல் வாழப்பாடியில் கொட்டவாடி பிரிவு சாலை, கடலுார் நெடுஞ்சாலை அருகே, கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம், நாளை நடத்த மேடை அமைக்கும் பணி நடந்தது. இதில் சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் நேரு, வேட்பாளரை அறிமுகம் செய்து வைப்பதாக, கட்சியினர் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்