தி.மு.க., ஆட்சியில் மக்கள் படும் இன்னல்களை எடுத்துரைக்க வேண்டும்
ஓமலுார்: ஓமலுார் அருகே உள்ள, அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில், இளைஞர், இளம்பெண் பாசறை, ஐ.டி., விங் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஓமலுார் எம்.எல்.ஏ., மணி தலைமை வகித்தார்.அதில் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசு-கையில், ''தகவல் தொழில்நுட்ப பிரிவினர், புதிதாக நியமிக்கப்-பட்ட உறுப்பினர்களை, வாட்ஸாப் குழுவில் இணைக்க வேண்டும். பாசறை நிர்வாகிகள், விடியா தி.மு.க., ஆட்சியில் மக்கள் படும் இன்னல்களை தெளிவாக, மக்களிடம் எடுத்து-ரைக்க வேண்டும். அனைவரும் இணைந்து களப்பணியாற்ற வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, ஒன்றிய செயலர்களிடம் பூத் கமிட்டி படிவம் வழங்-கப்பட்டது. ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகரன், ஓமலுார், மேட்டூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.