உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு கல்லுாரி மாணவர்களுக்கு போதை தடுப்பு விழிப்புணர்வு

அரசு கல்லுாரி மாணவர்களுக்கு போதை தடுப்பு விழிப்புணர்வு

ஆத்துார்: ஆத்துார் அரசு கல்லுாரியில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.ஆத்துார், வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில், நேற்று, போதை பொருள் தடுப்பு மற்றும் சாலை விதிகள் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் பங்கேற்ற, ஆத்துார் சார்பு நீதிமன்ற நீதிபதி கணேசன், 'போதை பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள், சாலை விதிகளை பின்பற்றும் வழிமுறைகள்' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். இந்நிகழ்ச்சியில் ஆத்துார் வக்கீல் சங்க தலைவர் சிவக்குமார், செயலர் மோகன்குமார், மூத்த வக்கீல்கள் ராமதாஸ், ராமலிங்கம், மோகன், கல்லுாரி முதல்வர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை