மூதாட்டியிடம் அத்துமீறல்; போதை தொழிலாளி கைது
சங்ககிரி: சங்ககிரி அருகே வேலம்மாவலசு, உப்பபாளையத்தான் காட்டை சேர்ந்த விவசாயி சின்னன்னன். இவரது மனைவி பெருமாயி, 85. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார். அப்போது வேலம்மாவலசு, கோம்பைக்காட்டை சேர்ந்த, கூலித்தொழிலாளி தங்கராசு, 30, மதுபோதையில் பெருமாயியிடம் தகாத முறையில் நடக்க முயன்றார். தொடர்ந்து அவரை அடித்து தாக்கியுள்ளார். மக்கள், பெருமாயியை மீட்டு, சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர் புகார்படி, சங்ககிரி போலீசார், தங்கராசுவை நேற்று கைது செய்தனர்.