உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மலைப்பகுதிகளில் டி.எஸ்.பி., சோதனை

மலைப்பகுதிகளில் டி.எஸ்.பி., சோதனை

வாழப்பாடி வாழப்பாடி டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையில், 7 பேர் அடங்கிய குழுவினர், நேற்று காலை முதல், மலையாளப்பட்டி, ஜம்பூத்துமலை, கருங்கல்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள மலைப்பகுதிகளில், கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.குறிப்பாக கள்ளச்சாராய ஊறல் வைக்கப்பட்டுள்ளதா என, சோதனை செய்தனர். இதுகுறித்து, டி.எஸ்.பி., சுரேஷ்குமார் கூறுகையில், ''மலைப்பகுதிகளில் கள்ளச்சாராய ஊறல், விற்பனை நடக்கிறதா என தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக, போலீசாருக்கு தகவல் தெரிவிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை