உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சோலார் மின் திட்டம் தோல்வியால் மக்கள் வரிப்பணம் ரூ.20 கோடி வீண்

சோலார் மின் திட்டம் தோல்வியால் மக்கள் வரிப்பணம் ரூ.20 கோடி வீண்

சேலம்: ''சேலத்தில், சோலார் மின் திட்டம் தோல்வியால், மக்கள் வரிப்-பணம், 20 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது,'' என, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள் கூறினார்.பா.ம.க., சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள், நேற்று கலெக்டர் பிருந்தாதேவியை, சந்தித்து பேசினார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான செட்டிச்சாவடி கிடங்கில், தினமும், 600 டன் குப்பை கொட்டப்படுகிறது. அதை எதிர்த்து கிராம கூட்டம், கையெழுத்து இயக்கம் நடத்தியதன் மூலம், மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், குப்பை கிடங்கையொட்டி, 20 கோடி ரூபாய் மதிப்பில் சோலார் மின் உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டது. அத்திட்டம் போடும் போதே வேண்டாம் என தடுத்தேன். துறை செயலரை சந்தித்து மனு அளித்து முறையிட்டேன். சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து பேசினேன்.அதையும் மீறி, கொண்டு வரப்பட்ட திட்டத்தின் மூலம், ஒரு யூனிட் மின்சாரம் கூட தயாரிக்க முடியாமல், மக்கள் வரிப்பணம், 20 கோடி ரூபாயை அதிகாரிகள் வீணடித்து விட்டனர். சோலார் தகடுகள் உள்ளிட்ட தளவாடங்கள் திருட்டுபோய்விட்டன. 20 சத-வீத கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு, தவறான திட்டத்தை கொண்டு வந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.தொழில்நுட்பம் தெரியாத எனக்கே, அத்திட்டம் தோல்வி என தெரிந்தபோது, தொழில் நுட்பம் தெரிந்த அதிகாரிகள் திட்ட-மிட்டு, 20 கோடி ரூபாயை வீணடித்தது எந்த வகையில் நியாயம். எனவே, உரிய ஆவணங்களுடன் மக்களை திரட்டி வந்து, இது தொடர்பாக புகார்மனு அளிக்க திட்டமிட்டுள்ளேன்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை