உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கட்சி நிர்வாகிகளுடன் இ.பி.எஸ்., ஆலோசனை

கட்சி நிர்வாகிகளுடன் இ.பி.எஸ்., ஆலோசனை

கட்சி நிர்வாகிகளுடன்இ.பி.எஸ்., ஆலோசனைஇடைப்பாடி, ஜன. 4-இடைப்பாடி அருகே சித்துார் படவெட்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம், 5ல் நடந்தது. அதில் பங்கேற்க, அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்.,க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் பங்கேற்க முடியாத நிலையில், நேற்று அக்கோவிலுக்கு சென்ற இ.பி.எஸ்., சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அங்குள்ள கல்யாண சுப்ரமணியர் கோவிலுக்கும் சென்று வழிபட்டார். பின் இடைப்பாடியில் உள்ள அரசு தங்கும் விடுதிக்கு வந்த அவர், கட்சி நிர்வாகம் தொடர்பாக, கொங்கணாபுரம் ஒன்றிய குழு தலைவர் மணி, நகர செயலர் முருகன், இடைப்பாடி ஒன்றிய செயலர்கள் மாதேஸ், மாதேஸ்வரன், கொங்கணாபுரம் ஒன்றிய செயலர் ராஜேந்திரன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை