உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மன உளைச்சலால் விவசாயி தற்கொலை

மன உளைச்சலால் விவசாயி தற்கொலை

இடைப்பாடி: இடைப்பாடி, நெடுங்குளம் அருகே மணக்காட்டை சேர்ந்தவர் முருகேசன், 60. இவரது மனைவி சம்பூர்ணம், 51. இவர்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி அதே பகுதியில் கூட்டு குடும்பமாக வசிக்கின்றனர். குடும்-பத்தில் ஏற்பட்ட கடன் பிரச்னையால், முருகேசன், அவரது விவ-சாய நிலத்தை கடந்த ஆண்டு விற்றார். பின் மன உளைச்சலில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மதியம், பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்-தினர் மீட்டு, இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டார். பூலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை