மேலும் செய்திகள்
கோடை உழவு தீவிரம்
24-Mar-2025
இடைப்பாடி:தேவூர் அருகே வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் அய்யாசாமி, 49. இவரது மனைவி மகாலட்சுமி, 43. மகன் ரோஹித், 21, மகள் ரூபா, 20, உள்ளனர். அய்யாசாமி, அவரது விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் கை உழவு இயந்திரம் மூலம் உழவு செய்து கொண்டிருந்தார். அப்போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் நேற்று உயிரிழந்தார். தேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Mar-2025