மேலும் செய்திகள்
'ஆப்பரேஷன் சிந்துார்' பா.ஜ., பேரணி
30-May-2025
மகுடஞ்சாவடி, மகுடஞ்சாவடி, ஏகாபுரம், கட்டபுளியன்காட்டை சேர்ந்த, விவசாயி பச்சமுத்து, 75. இவர் நேற்று முன்தினம் காலை, 11:30 மணிக்கு, ஆட்டை பிடித்து கொண்டு தோட்டத்துக்கு சென்றார். அங்கு ஆடு மேய்வதற்கு, ஒரு செடியில் கயிற்றால் கட்டிக்கொண்டிருந்தார். அப்போது ஆடு பாய்ந்து அவர் நெற்றியில் பலமாக முட்டியதில் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் பார்த்து, அவரை மீட்டு, மகுடஞ்சாவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின், மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று மதியம் இறந்தார். மகுடஞ்சாவடி போலீசார் விசாரிக்கின்றனர்.
30-May-2025