மேலும் செய்திகள்
மர்ம விலங்கின் கால் தடம்; சிறுத்தையா என சந்தேகம்
16-Oct-2024
சிறுத்தை நடமாட்டம்விவசாயிகள் அச்சம்சங்ககிரி, நவ. 10-சங்ககிரி, சின்னாக்கவுண்டனுார், மொத்தையனுார் அருகே மாங்காட்டை சேர்ந்த விவசாயி ராஜம்மாள். இவரது செம்மறி ஆடுகள் அதே பகுதியில் மேய்ச்சலில் இருந்த நிலையில், ஒரு ஆட்டை மர்ம விலங்கு கடித்தில் உயிரிழந்தது.இதனால் அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து மர்ம விலங்கு ஆடுகளை கடித்துக்கொன்றுவிடுவதாக, வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் சின்னா கவுண்டனுார் வி.ஏ.ஓ., முருகன், ஆலத்துார் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் வெங்கடாஜலம், இறந்த ஆட்டை பார்வையிட்டனர். அப்போது, 'சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், அச்சத்துடன் வசிக்கிறோம். மேலும் சூரியமலையையொட்டிய பகுதிகளில் சிறுத்தைகள் நடமாடி வருவதால் வருவாய்த்துறை, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தினர்.
16-Oct-2024