உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மின் கம்பி அறுந்து விழுந்ததில் தீ மக்காச்சோள தட்டைகள் நாசம்

மின் கம்பி அறுந்து விழுந்ததில் தீ மக்காச்சோள தட்டைகள் நாசம்

தலைவாசல்: தலைவாசல், வெள்ளையூரை சேர்ந்தவர் சின்னசாமி, 50. இவ-ரது தோட்டத்தில் மக்காச்சோள சாகுபடி செய்துள்ளார். அவரது தோட்ட மேற்புறம், மின் கம்பி செல்கிறது. நேற்று காலை, 11:30 மணிக்கு மின் கம்பி அறுந்து விழுந்ததில் தீப்பற்றி, மக்காச்-சோளம் தட்டைகள் எரிந்தன. கெங்கவல்லி தீயணைப்பு நிலையம், மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. மதியம், 12:10 மணிக்கு தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்-துக்கு சென்று, மேலும் தீ பரவாமல் அணைத்தனர். ஆனால் அறுவடை செய்த அரை ஏக்கர் தோட்டத்தில் தட்டைகள் எரிந்து நாசமாகின. தீயை அணைத்ததால், அறுவடை செய்யாமல், அருகே இருந்த தோட்டம் தப்பியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை