உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓய்வூதிய மனு மீது உடனடி நடவடிக்கை நாட்டுப்புற கலைஞர்கள் வலியுறுத்தல்

ஓய்வூதிய மனு மீது உடனடி நடவடிக்கை நாட்டுப்புற கலைஞர்கள் வலியுறுத்தல்

வாழப்பாடி, தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் மாநில கலை விழா மாநாடு, வாழப்பாடியில் நேற்று நடந்தது. முன்னதாக நாட்டுப்புற கலைஞர்கள், வாழப்பாடி பஸ் ஸ்டாண்டில் மேளதாளம் முழங்க, கலைத்திறன்களை வெளிப்படுத்தினர். தொடர்ந்து வாழப்பாடி கலை விழா மற்றும் சங்க பெயர் பலகையை, மாநில தலைவர் சத்யராஜ் திறந்து வைத்தார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 2,000க்கும் மேற்பட்ட தெருக்கூத்து, மயிலாட்டம், ஒயிலாட்டம், தாரை தப்பட்டை, பம்பை, கோலாட்டம், கும்மி, நையாண்டி, நாதஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் பங்கேற்றனர். இதுகுறித்து சத்யராஜ் கூறியதாவது:நாட்டுப்புற கலைஞர்களின் ஓய்வூதிய தொகையை உயர்த்த வேண்டும். ஓய்வூதியம் பெற மனு அளிக்கும்போது, 3, 4 ஆண்டுக்கு மேல் ஆகிறது. ஓய்வூதியம் பெறுவதற்குள், மனு அளித்தவர் இறந்து விடும் சூழல் நடக்கிறது. அதனால் ஓய்வூதிய மனுக்களை, வருவாய்த்துறையினர் அலைக்கழிப்பு செய்யக்கூடாது. அதற்கேற்ப அரசு எளிமைப்படுத்தி, தாமதத்தை தவிர்த்து உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி