உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கணக்கில் வராத பணம் பறிமுதல்

கணக்கில் வராத பணம் பறிமுதல்

ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 500 கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.சேலம் மாவட்டம் ஆத்தூர், தென்னங்குடிபாளையம் பகுதியில், ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு, அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக இருந்த புகார் தொடர்பாக மாலை 4 மணி முதல் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையிலான போலீசார் அலுவலகத்தை பூட்டி சோதனை நடைபெற்று வரும் நிலையில் இந்த சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்து தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை