உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தில் படுகாயமான முன்னாள் தலைவர் பலி

விபத்தில் படுகாயமான முன்னாள் தலைவர் பலி

வாழப்பாடி: வாழப்பாடி, புதுப்பாளையம், மங்கம்மா நகரை சேர்ந்தவர் ராஜா, 53. வி.புதுப்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர். இவர் கடந்த, 11 மாலை, 5:00 மணிக்கு, ஹெல்மெட் அணியாமல் புதுப்பாளையம் அருகே, ஆர்.டி.ஓ., அலுவலக பகுதியில் இருந்து, வாழப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி விழுந்ததில், தலையில் படுகாயம் ஏற்பட, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். ராஜா மனைவி ஜோதி புகார்படி, வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ