உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காஸ் ஒப்பந்த தொழிலாளர் போராட்டம்: தொழிலாளர் துறை அதிகாரிகள் விசாரணை

காஸ் ஒப்பந்த தொழிலாளர் போராட்டம்: தொழிலாளர் துறை அதிகாரிகள் விசாரணை

ஓமலுார்: சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே கருப்பூரில், 'இண்டியன் ஆயில் கார்ப்பரேஷன்' நிறுவனத்தின் சமையல் காஸ் நிரப்பும் ஆலை உள்ளது. அங்கு, 65 பேர், சிலிண்டர்களை ஏற்றி, இறக்கும் பணியில், ஒப்பந்த தொழிலாளர்களாக ஈடுபட்டனர். அவர்கள் தொழிற்சங்கத்தில் இணைந்ததால், நிர்வாகத்துக்கு எதிராக செயல்படுவதாக கருதி, 65 பேரையும் பணியில் இருந்து நிறுத்திவிட்டனர்.இதனால் மீண்டும் பணி கேட்டு, 8ம் நாளாக நேற்று, ஒப்பந்த தொழிலாளர்கள், ஆலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சேலம் மாவட்ட தொழிலாளர் துறை அலுவலக அதிகாரிகள், ஆலை நிர்வாகத்தினருடன் ஒரு மணி நேரம் பேச்சு நடத்தினர்.அதற்கு பின் தொழிலாளர்கள் கூறுகையில், 'அதிகாரிகள் நடத்திய பேச்சுக்கு பின், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, 10 பேரை தவிர மற்றவர்கள் கடிதம் கொடுத்துவிட்டு பணிக்கு வர அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் நாளை(இன்று) காலை பணிக்கு வந்தால்தான் தெரியும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை