உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தங்கம் விலை பவுனுக்கு ரூ.63 ஆயிரத்தை கடந்து விற்பனை

தங்கம் விலை பவுனுக்கு ரூ.63 ஆயிரத்தை கடந்து விற்பனை

சேலம்: தங்கம் பவுன் விலை, 63 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனை-யாகிறது.சர்வதேச மார்க்கெட் நிலவரத்தின் அடிப்படையில், தங்கத்தின் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனை செய்யப்பட்டு வருகி-றது. இது தவிர, அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய அறிவிப்புகள், பொருளாதார நிலை உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. தங்கம் விலை உயர்வால் ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள் கலக்கத்தில் உள்ளனர். விலை எப்போது குறையும் என, எதிர்பார்த்து காத்து கொண்டிருந்-தவர்களுக்கு, உச்ச விலையில் தங்கம் விற்பனையாவது, அவர்-களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.கடந்த, 8ல் தங்கம் கிராம், 7,865, பவுன், 62,920 ரூபாய், வெள்ளி கிராம், 104, பார் வெள்ளி 1,04,000 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று தங்கம் கிராமிற்கு, 50 உயர்ந்து, 7,915 ரூபாய், பவுன், 400 உயர்ந்து, 63,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் விற்கப்பட்டது.இந்தாண்டின் தொடக்கத்தில் ஜன.,1ல் தங்கம் கிராம், 7,150, பவுன், 57,200 ரூபாய், வெள்ளி கிராம், 96, பார் வெள்ளி, 96 ஆயிரம் ரூபாயாக விற்கப்பட்டது. பிப்.,1ல் தங்கம் கிராம், 7,660, பவுன், 61,280 ரூபாய், வெள்ளி கிராம், 103, பார் வெள்ளி, 1,03,000க்கு விற்பனையானது. ஜன.,1ல் இருந்து நேற்று வரை ஒப்-பிடுகையில், 41 நாட்களில் தங்கம் கிராமிற்கு, 795 ரூபாய், பவு-னுக்கு, 6,360 ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு, 8 ரூபாய், பார் வெள்ளி, 8,000 ரூபாய் உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை