உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு பஸ் டிரைவர் உயிரிழப்பு: தி.மு.க., சார்பில் ரூ. 5 லட்சம் நிதி

அரசு பஸ் டிரைவர் உயிரிழப்பு: தி.மு.க., சார்பில் ரூ. 5 லட்சம் நிதி

சேலம்: சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த ஏத்தாப்பூர் பேரூராட்சி, அபிநவம் கிராமத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் அன்பழகன், 51. இவர் கடந்த, 20ல், நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, அமைச்சர்கள் உதயநிதி, நேரு ஆகியோர் ஆலோசனைபடி, சேலம் மத்திய மாவட்ட தி.மு.க., செயலர் வக்கீல் ராஜேந்திரன், அன்பழகனின் வீட்டுக்கு நேரில் சென்று, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து, தொ.மு.ச., சார்பில், 3 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினார்.மாவட்ட கவுன்சில் தலைவர் மணி, பொதுச்செயலர் மனோகரன், பொருளாளர் முருகன், துணைத்தலைவர் ஸ்ரீதர், பட்டீஸ்வரன், மலர்செல்வன், வேலு ஆகியோர் உடனிருந்தனர். அதேபோல, கிழக்கு மாவட்டம் சார்பில் அதன் செயலர் சிவலிங்கம், 2 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தார். மாவட்ட துணைத்தலைவர் பாரப்பட்டி சுரேஷ்குமார், அவைத்தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்ரீராம், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.மாவட்ட செயலர்கள் கூறுகையில், 'முதல்வர் உத்தரவுப்படி அன்பழகனின் குடும்பத்தாருக்கு நிதியுதவி வழங்கி உள்ளோம். கருணை அடிப்படையில், அவரது குடும்பத்தாருக்கு, வாரிசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ