உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஐ.டி.ஐ., வளாகத்தில் அரசு ஊழியர்கள் பிரசாரம்

ஐ.டி.ஐ., வளாகத்தில் அரசு ஊழியர்கள் பிரசாரம்

சேலம்,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல் உள்பட, வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், கடந்த, 24ல் வாகன பிரசாரம் தொடங்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில், 9 முனைகளில் இருந்து புறப்பட்ட வாகன பிரசாரம், வரும், 28 வரை நடக்கிறது. நேற்று, கோரிமேடு அரசு ஐ.டி.ஐ., வளாகத்தில் அதன் ஊழியர்கள் இடையே பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அஸ்தம்பட்டி தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் நடந்தது. மாவட்ட செயலர் சுரேஷ், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 'டிச., 4ல், கோட்டை மைதானத்தில் மறியல் போராட்டம் நடத்தப்படும். அதற்கான பிரசாரம் நடக்கிறது' என, நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி