உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காளியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் விழா

காளியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் விழா

இடைப்பாடி : இடைப்பாடி அருகே, நாச்சிபாளையம் காளியம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர்.இடைப்பாடி அருகே, நாச்சிபாளையத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு கோவில் திருவிழா ஆண்டுதோறும் தை மாதம் நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டுக்கான திருவிழா கடந்த, 2ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு சத்தாபரண நிகழ்ச்சி நடைபெற்றதை அடுத்து, நேற்று காலை கோவில் முன்புறம் உள்ள மைதானத்தில், 42 அடி நீளமுள்ள தீ குண்டம் பற்ற வைக்கப்பட்டது. இதில் சக்தி கரகம் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தீ மிதித்தனர். கடைசி நிகழ்ச்சியாக இன்று மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி