உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்

வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்

சேலம், சேலம், கிச்சிப்பாளையம், ராஜாபிள்ளை காடு, கடம்பூர் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 28. கடந்த, 6ல் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த பிரபு என்பவரை முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தினார். அவர் புகாரில், கிச்சிப்பாளையம் போலீசார் தமிழ்செல்வனை கைது செய்தனர். அவர் மீது, 2023, 2024ம் ஆண்டுகளில் அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.இதனால் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க, போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவுப்படி, நேற்று தமிழ்செல்வன் மீது குண்டாஸ் பாய்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை