உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மரவள்ளி கிழங்கு அறுவடை விறுவிறு

மரவள்ளி கிழங்கு அறுவடை விறுவிறு

இடைப்பாடி : இடைப்பாடி அருகே தேவூர், குள்ளம்பட்டி, மேட்டுப்பாளையம், சின்னாம்பாளையம், குருக்குபாறையூர், பச்சபாலியூர், செங்-கானுார், மோட்டூர், பொன்னம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 10 மாதத்தில் விளைச்சலுக்கு வரக்கூடிய மரவள்ளி கிழங்கு சாகு-படியை விவசாயிகள் அதிகளவில் செய்துள்ளனர். அவ்வாறு சாகு-படி செய்யப்பட்ட வயல்களில் தற்போது விளைச்சல் அடைந்துள்-ளதால் விவசாயிகள் கூலித்தொழிலாளர்களை பயன்படுத்தி, கிழங்கு பிடுங்கி அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடு-பட்டு வருகின்றனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் விவசாயி முத்துசாமி கூறியதா-வது: விவசாய வயல்களில் மரவள்ளி கிழங்கு குச்சிகளை ஊன்றி நடவு செய்து தண்ணீர் பாய்ச்சுதல், உரம் இடுதல், களை எடுத்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணி செய்து வந்தோம். மர-வள்ளி கிழங்கு மகசூல் ஏக்கருக்கு, 12 டன் முதல், 15 டன் வரை விளைச்சல் தரும். தற்போது வியாபாரிகள் மரவள்ளி கிழங்கு டன்னுக்கு, 9,000 முதல், 12,000 ரூபாய் வரை விலை கொடுத்து மொத்தமாக வாங்கி சென்று வருகின்றனர். இந்த மரவள்ளி கிழங்-குகள், ஈரோடு மாவட்டம் பூனாச்சி; சேலம் மாவட்டம் ஆத்துார்; நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை