உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வங்கதேச முகாமில் உயர்மட்ட குழு ஆய்வு

வங்கதேச முகாமில் உயர்மட்ட குழு ஆய்வு

ஆத்துார், ஆத்துார் தாலுகா அலுவலக வளாகத்தில், வங்கதேச முகாம் செயல்படுகிறது. அங்கு, 129 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதில் தண்டனை காலம் முடிந்த, 50 பேர், 9 சிறுவர்களை, சொந்த நாட்டுக்கு அனுப்ப, கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பான ஆவணங்கள், மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று, வங்கதேச நாட்டின் உயர்மட்ட குழு அதிகாரியான சோமன்தெப், ஹரிஷ்குமார் ஆகியோர், சிறப்பு முகாமுக்கு வந்து, அங்குள்ளவர்களிடம், 2 மணி நேரம் பேசினர். அப்போது முகாமில் இருந்தவர்கள், 'எங்களை வங்கதேசத்துக்கு அழைத்துச்செல்லுங்கள்' என, கோரிக்கை விடுத்தனர். குழுவினர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை