உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வரும் 5ல் உண்ணாவிரதப் போராட்டம்; பங்கேற்க வீடுகள் தோறும் பிரசாரம்

வரும் 5ல் உண்ணாவிரதப் போராட்டம்; பங்கேற்க வீடுகள் தோறும் பிரசாரம்

பனமரத்துப்பட்டி: சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரி, 2,137 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அந்த ஏரி, 15 ஆண்டுக்கு மேலாக வறண்டு, சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. அந்த மரங்களை அகற்றி, ஏரியை சீரமைத்து சுற்றுலா தலமாக்க, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் அந்த ஏரியை சீரமைக்கக்கோரி, தமிழக ஏரி இயற்கை பாதுகாப்பு இயக்கம் சார்பில், வரும், 5ல் பனமரத்துப்-பட்டியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது. இதனால் பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்தில் உள்ள, 1, 2, 3வது வார்டு மக்களை, போராட்ட குழுவினர் நேற்று சந்தித்து, உண்ணாவிரதத்தில் பங்கேற்க அழைத்து விடுத்தனர்.மேலும் வீடுகள் தோறும் சென்று ஏரியின் சிறப்பு, பயன், சீரமைப்பின் அவசியம், குடிநீர் தேவை, விவசாயம் பாதிப்பு குறித்து துண்டு பிரசுரம் வழங்கி, போராட்-டத்துக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். இதில் காமராஜர் உழவர் மன்ற நிர்வாகிகள், தமிழ்நாடு ஏரி இயற்கை பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள், விவசாய சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ