மேலும் செய்திகள்
கு.க., செய்த பெண் பலி உறவினர்கள் சாலை மறியல்
20-Nov-2024
விபத்தில் கணவர் பலிமனைவி படுகாயம்பெத்தநாயக்கன்பாளையம், டிச. 8-வாழப்பாடி, மேட்டுப்பட்டியை சேர்ந்த, பெயின்டர் ரவி, 53. அவரது மனைவி ஜீவரத்தினம், 45. கூலித்தொழிலாளி. தம்பதியர், கொத்தாம்பாடி அருகே உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, நேற்று, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், 'பீனிக்ஸ்' பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டனர்.ஹெல்மெட் அணியாமல் ரவி ஓட்டினார். மாலை, 4:30 மணிக்கு, பெத்தநாயக்கன்பாளையம், தண்ணீர் பந்தலில் சென்றபோது, முன்புறம் கணேசன், 60, என்பவர் ஓட்டிச்சென்ற டிராக்டர் மீது, ரவி பைக் மோதியது.இதில் ரவி, ஜீவரத்தினம் படுகாயம் அடைந்தனர். அவர்களை மக்கள் மீட்டு பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழியில் ரவி உயிரிழந்தார். ஜீவரத்தினம் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். ஏத்தாப்பூர் போலீசார், டிராக்டரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
20-Nov-2024