உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொழில் போட்டி: வியாபாரிக்கு அடி

தொழில் போட்டி: வியாபாரிக்கு அடி

கரூர்: கரூரில், தொழில் போட்டி காரணமாக சிக்கன் வியாபாரியை அடித்த, மீன் வியாபாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் அருண்குமார், 30; இவர், கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே சிக்கன் வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியில், கரூர் மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த வடிவேல், 43, மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே, ஏற்கனவே தொழில் ரீதியாக முன் விரோதம் உள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் சிக்கன் கடையில் உட்கார்ந்திருந்த அருண்குமாரை, வடிவேல் தகாத வார்த்தையால் பேசி அடித்துள்ளார். இதுகுறித்து, அருண்குமார் கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் வடிவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை