உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மழை தண்ணீரை வெளியேற்ற வலியுறுத்தல்

மழை தண்ணீரை வெளியேற்ற வலியுறுத்தல்

குளித்தலை, குளித்தலை அடுத்த வாலாந்துார் கிராமத்தில், நேற்று முன்தினம் பெய்த மழை தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கியுள்ளது.சாலையில் தேங்கியுள்ள மழைநீரில், கிராம மக்கள் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் நடந்து செல்லும் அவலம் உள்ளது. மேலும், மழை தண்ணீர் தேங்கி இருப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் நிலை காணப்படுகிறது. இதுதவிர தேங்கிய மழை நீரில் கொசுக்களின் நடமாட்டமும் உள்ளது. எனவே, போர்க்கால அடிப்படையில், மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி