உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வெளிநாட்டு மதுபான பாரில் சோதனை; 112 பாட்டில்கள் பறிமுதல்

வெளிநாட்டு மதுபான பாரில் சோதனை; 112 பாட்டில்கள் பறிமுதல்

ஈரோடு: ஈரோடு மதுவிலக்கு டி.எஸ்.பி., சண்முகம் நேற்று, ஆணைக்கல் பாளையத்தில் செயல்பட்டு வரும் மில்லியன்ஸ் எப்.எல். (வெளிநாட்டு மதுபானம்) பாரில் சோதனை நடத்தினார். அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவும், மதுபானம் விற்க உள்ள சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாகவும், மதுபானங்கள் விற்பனை செய்ததை கண்டுபிடித்தார். அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த, 95 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தார். பார் ஊழியரான கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்த மணிகண்டன், 48, என்பவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள பார் உரிமையாளரான, 46 புதுாரை சேர்ந்த முருகானந்தம், 35, என்பவரை தேடி வருகின்றனர்.இதே போல், முத்தம்பாளையம் டாஸ்மாக் பாரில் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாக நேற்று காலை, 27 மதுபான பாட்டில்கள் விற்பனைக்கு தயாராக இருந்தது. டி.எஸ்.பி. சோதனையின் போது கண்டுபிடித்து, பார் ஊழியரான ஈரோடு பாரதி நகரை சேர்ந்த சந்தோஷ், 24, என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பார் உரிமையாளர் மோகனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ