உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / லண்டன் ஆர்த்தோ மருத்துவமனையில் அதிநவீன ரோபோ சிகிச்சை அறிமுகம்

லண்டன் ஆர்த்தோ மருத்துவமனையில் அதிநவீன ரோபோ சிகிச்சை அறிமுகம்

சேலம் : சேலம், அண்ணா பூங்கா எதிரே, லண்டன் ஆர்த்தோ சிறப்பு மருத்துவமனை உள்ளது. அங்கு, மூட்டு வலிகளுக்கு பலவித சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, ௧௦ வகை சிறப்பு ஊசிகள், வலி, ஜெல் ஆயில், ஸ்டீராய்டு, சிறு துவார ஆர்த்ரோஸ்கோபி, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற்றை, 15 ஆண்டுகளாக சேலத்தில் வழங்கி வருகின்றன. தற்போது, 16ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சேலம் மண்டலத்தில் முதல்முறை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் அதிநவீன ரோபோ சிகிச்சை முறை, லண்டன் ஆர்த்தோ மருத்துவமனை டாக்டர் சுகவனம் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது.இதுகுறித்து சுகவனம் கூறியதாவது:மூட்டு மாற்று சிகிச்சை வளைந்த கால்களை நேராக்குவது முக்கிய சிகிச்சை முறை. அதை மிக துல்லியமாக, வேகமாக அளவு மாறாமல் மிகக்குறைந்த சேதங்களுடன் நவீன ரோபோ முறையில் சிகிச்சை நடக்கிறது. கம்ப்யூட்டர் ஸ்கேன் மேற்பார்வையால், மிக துல்லியமாக அறுவை சிகிச்சை நடப்பதால், நோயாளிக்கு வலி மிக குறைவு. விரைவில் வலியின்றி நடக்க முடியும். இதுவரை, 26,000 எலும்பு, மூட்டு, ஜவ்வு, தண்டுவட அறுவை சிகிச்சை, 6,000 மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, 1,000க்கும் மேற்பட்ட இரு கால்களுக்கும் ஒரே நாளில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மருத்துவர் ராமசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை