உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நந்திக்கு வண்ணம் தீட்டும் பணி ௬ல் சிறப்பு பூஜை நடத்த முடிவு

நந்திக்கு வண்ணம் தீட்டும் பணி ௬ல் சிறப்பு பூஜை நடத்த முடிவு

மேட்டூர் : மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த, 1925ல் அணை கட்டும்போது நீர்பரப்பு பகுதியில் வசித்த மக்கள், கிராமங்களில் இருந்து வெளியேறினர். அங்கு கட்டப்பட்டிருந்த ஆலயங்கள், வீடுகள் அணைக்குள் இருந்தன. நீர்மட்டம், 68 அடியாக சரியும்போது பண்ணவாடி நீர்பரப்பு பகுதியில் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலையின் தலை மட்டும், 2 அடி வெளியே தெரியும்.நடப்பாண்டு வறட்சியால், கடந்த பிப்., 4ல், 70.05 அடியாக இருந்த அணை நீர்மட்டம் பிப்., 5ல், 69.42 அடியாக சரிந்தது. இதனால் நந்தி சிலை தலை வெளியே தெரிந்தது. நேற்று அணை நீர்மட்டம், 46.73 அடியாக சரிந்ததால், 20 அடி உயர நந்தி சிலை முழுதும் தெரிந்தது.இந்நிலையில் கொளத்துார் அடுத்த பாலவாடி, கோவிந்தப்பாடியை சேர்ந்த இளைஞர்கள், நந்தி சிலைக்கு முதல்முறை வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரு நாட்களாக நடக்கும் இப்பணி இன்று முடிந்து விடும். வரும், 6ல் அமாவாசையன்று, நந்தி சிலைக்கு சிறப்பு பூஜை நடத்த, இளைஞர்கள் திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை