உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபட்டில் அமர்ந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

மொபட்டில் அமர்ந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

வாழப்பாடி: ஆத்துார் அடுத்த மல்லியக்கரை அருகே சீலியம்பட்டியை சேர்ந்த, குமரேசன் மனைவி மணிமேகலை, 40. இவரது மகள் கோபிகா, 20. இருவரும் நேற்று இரவு, 7:30 மணிக்கு மல்லியக்கரையில் இருந்து அயோத்தியாப்பட்டணம் நோக்கி உறவினர் வீட்டுக்கு, 'மேஸ்ட்ரோ' மொபட்டில் சென்றுகொண்டிருந்தனர். மணிமேகலை ஹெல்மெட் அணிந்து ஓட்டினார்.வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது, அவர்களுக்கு பின்னால் பைக்கில் வந்த இருவர், மொபட்டில் அமர்ந்து சென்ற கோபிகா அணிந்திருந்த, 1.7 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். அதில் நிலைதடுமாறி மணிமேகலை, கோபிகா விழுந்து காயம் அடைந்தனர். நகையை பறித்த இருவரும் தப்பிவிட்டனர். காயம் அடைந்த தாய், மகளை, மக்கள் மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை