மேலும் செய்திகள்
ரேஷன் கட்டடம் எம்.எல்.ஏ., திறப்பு
06-Jun-2025
சங்ககிரி, சங்ககிரி லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தேர்தல், 3 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது. அதன்படி, 2025 - 2028ம் ஆண்டுக்கு, தலைவர், செயலர், பொருளாளர், உப தலைவர், இணை செயலர், 20 நிர்வாக குழு உறுப்பினர் என, 25 பதவிகளுக்கான தேர்தல், கடந்த, 11ல் வேட்புமனு தாக்கலுடன் தொடங்கியது. 51 பேர் போட்டியிட்டனர். கடந்த, 23ல் ஓட்டுப்பதிவு நடந்தது. 3,752 உறுப்பினர்களில், 3,618 பேர் ஓட்டுப்போட்டனர். நேற்று முன்தினம், சேலம் மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத்தலைவரான, தேர்தல் குழு தலைவர் தனராஜ் முன்னிலையில் முடிவு அறிவிக்கப்பட்டது. அதில், 1,929 ஓட்டுகள் பெற்று கந்தசாமி, மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது அணியில் செயலராக முருகேசன், பொருளாளராக செங்கோட்டுவேலு, உப தலைவராக எஸ்.வெங்கடாஜலம், இணை செயலராக ஆர்.வெங்கடாஜலம் வெற்றி பெற்றனர். அதேபோல் கார்த்திக், சத்தியமூர்த்தி, அழகேசன், பூமலை, ரவி, விஜயகுமார், தென்னரசு, கார்த்திக்ராஜா, ராஜகணபதி, குமார், ஈஸ்வரமூர்த்தி, பிரேம்குமார், ஜெகதீஷ், சிவக்குமார், பச்சியண்ணன், அத்தியண்ணன், தீபக், குமார், ஜெயபிரகாஷ், ராஜா ஆகியோர், நிர்வாக குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர். புது நிர்வாகிகளுக்கு, லாரி உரிமையாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
06-Jun-2025