உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாநில அளவில் கட்டா கராத்தே

மாநில அளவில் கட்டா கராத்தே

தாரமங்கலம்: தமிழ்நாடு கியோகுஷின் கைகன் கராத்தே தற்காப்பு கலை சார்பில், 4வது, மாநில கட்டா போட்டி, தாரமங்கலத்தில் நேற்று நடந்தது. கோவை, கரூர், சங்ககிரி, சேலம் உள்பட பல்வேறு பகு-திகளில் இருந்து, 100 பேர் பங்கேற்றனர். அவர்கள் தற்காப்பு கலையை ஊக்குவிக்கும் விதமாக, செங்குந்தர் மண்டபத்தில் இருந்து, தேர் நிலையம், பஸ் ஸ்டாண்ட் உள்பட முக்கிய வீதி-களில் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். தொடர்ந்து தகுதி அடிப்படையில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டன. பயிற்சி-யாளர்கள் கோபிகண்ணன், ஆறுமுகம், ஏற்பாட்டாளர்கள் ராமச்-சந்திரன், வெங்கடேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை