உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மத்திய அரசு பாரபட்சம் கேரள எம்.பி., வருத்தம்

மத்திய அரசு பாரபட்சம் கேரள எம்.பி., வருத்தம்

இடைப்பாடி: அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க கூட்டம், சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் நேற்று நடந்தது. மாநில துணை தலைவர் கணபதி தலைமை வகித்தார்.இதில் கேரள மாநில ராஜ்யசபா எம்.பி., சிவதாசன் பேசியதாவது: விவசாய தொழிலாளர்களின் மாத கூலி, 9,000 ரூபாயாக உள்ளது. கூலியை உயர்த்தி தர வேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக, கிராமப்புற அரசு மருத்துவமனைகளை சீர்படுத்த, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில் மொழி வளர்ச்சிக்கு, 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கேரள மாநிலத்தில் ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. 25,000 பேர் பேசும் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு, 850 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. பாரபட்சம் காட்டும் மத்திய அரசை, தொழிலாளர்கள் ஒன்றுசேர்ந்து எதிர்ப்போம். இவ்வாறு அவர் பேசினார்.அகில இந்திய துணை தலைவர் லாசர், பொது செயலர் அமிர்தலிங்கம், கம்யூ., கட்சி இடைப்பாடி தாலுகா செயலர் பெரியண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ