உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கொச்சுவேலி - ஷாலிமார் சிறப்பு ரயில் நீட்டிப்பு

கொச்சுவேலி - ஷாலிமார் சிறப்பு ரயில் நீட்டிப்பு

சேலம்: திருவனந்தபுரம், கொச்சுவேலியில் இருந்து கோல்கட்டாவின் ஷாலிமார் வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இச்சேவை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும், 23 முதல் செப்., 13 வரை வெள்ளி மாலை, 4:20க்கு கொச்சுவேலியில் புறப்படும் ரயில் கொல்லம், பாலக்கோடு, கோவை, ஈரோடு வழியே மறுநாள் அதிகாலை, 4:27க்கு சேலம் வரும். இங்கிருந்து, 4:30க்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, ரேணிகுண்டா, ராஜமுந்திரி வழியே ஞாயிறு மதியம், 1:40க்கு ஷாலிமாரை அடையும். மறுமார்க்க ரயில் வரும், 26 முதல் செப்., 16 வரை திங்களில் ஷாலிமாரில் மதியம், 2:20க்கு புறப்பட்டு செவ்வாய் இரவு, 9:27க்கு சேலம் வரும். இங்கிருந்து, 9:30க்கு புறப்பட்டு மறுநாள் காலை, 9:55 மணிக்கு கொச்சுவேலியை அடையும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி