உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கொலையாளிகளை பிடித்த போலீசாருக்கு பாராட்டு

கொலையாளிகளை பிடித்த போலீசாருக்கு பாராட்டு

மேட்டூர் : கொளத்துார், மேச்சேரியில் இரு கொலை வழக்கில் கொலையாளிகளை கண்டுபிடித்த எஸ்.எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசாரை டி.எஸ்.பி., பாராட்டினார்.மேட்டூர் உபகோட்டத்துக்கு உள்பட்ட கொளத்துார், குரும்பனுார் அருகிலுள்ள கிராமத்தில் வசித்த முதியவர் ராமசாமி மனைவி அத்தாயம்மாள் என்பவரை, சவேரியார் பாளைத்தை சேர்ந்த ஆசிரியர் மரியலுாயிஸ், 39, கடந்த ஆண்டு செப்.,9ல் கொலை செய்தார். ஓராண்டு தலைமறைவாக இருந்த அவரை, கொளத்துார் போலீசார் கடந்த மாதம், 17ல் கொளத்துாரில் கைது செய்தனர். சேலம், கருப்பூர் உப்பு கிணறு பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ், 32. பி.என்.பட்டி அடுத்த அரங்கனுாரில் பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆலையில், வேலை செய்த அவரை கடந்த மாதம், 28ல் அவருடைய உறவினர் வெங்கடேசன், 31, கொலை செய்தார். உடந்தையாக இருந்த காமனேரி தினேஷ், 25, ஆகியோரை கடந்த, 2ல் கைது தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேட்டூரில் டி.எஸ்.பி., ஆரோக்யராஜ் தலைமையில், நேற்று நடந்த ஆய்வு கூட்டத்தில், 4 ஸ்டேசன் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், போலீசார் பங்கேற்றனர். கொளத்துார், மேச்சேரியில் கொலை செய்த கொலையாளிகளை கண்டுபிடித்த தனிப்படை எஸ்.எஸ்.ஐ.,க்கள் நாகராஜ், சிவராஜ், போலீசார் சந்தோஷ், கலையரசன் ஆகியோருக்கு டி.எஸ்.பி., பாராட்டி பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ