உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலத்தில் கே.வி.டெக்ஸ் திறப்பு

சேலத்தில் கே.வி.டெக்ஸ் திறப்பு

சேலம், கடலுாரை தலைமையிடமாக கொண்டு, கே.வி.டெக்ஸ் செயல்படுகிறது. அதன் இரண்டாவது கிளை புதுச்சேரியில் உள்ளது. தற்போது, 3ம் கிளையை, சேலம், ஓமலுார் பிரதான சாலையில், 4 தளங்களுடன் நேற்று திறக்கப்பட்டது. இதில் அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், மக்கள் பங்கேற்றனர். இதுகுறித்து கே.வி.டெக்ஸின் நிர்வாக இயக்குனர்கள் கண்ணப்பன், வெங்கடேஸ்வரன் கூறியதாவது:தரைத்தளத்தில் புடவைகள், முதல் தளத்தில் பட்டுக்கான பிரத்யேக பிரிவு உள்ளன. 2ம் தளத்தில் குழந்தைகள் ஆடைகள், 3ம் தளத்தில் ஆண்கள் ஆடை ரகங்கள் வைக்கப்பட்டுள்ளன. எஸ்கலேட்டர், லிப்ட், கார் பார்க்கிங், புட் கோர்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.திறப்பு விழாவை ஒட்டி, 750 ரூபாய்-க்கு மேல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. அனைத்து பட்டு ரகங்களும் தறி விலைக்கே வழங்கப்படுகிறது. தமிழகத்தில் முதல்முறை பட்டுக்கு, 20 சதவீத தள்ளுபடி வழங்கும் நிறுவனம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை