சேலத்தில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
சேலத்தில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்சேலம், நவ. 12- நாகர்கோவிலில், வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, சேலத்தில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நாகர்கோவில் தக்கலை அருகே, சரல்விளையை சேர்ந்த வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சோபி, 55, மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து, சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், நேற்று மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் இமயவர்மன் தலைமை வகித்தார்.வழக்கறிஞரை கொலை செய்தவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடு க்க வேண்டும்; மத்திய, மாநில அரசுகள் வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.* தமிழகத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த கோரி, வாழப்பாடியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது. வாழப்பாடி வக்கீல் சங்க தலைவர் வீரமுத்து தலைமை வகித்தார். செயலாளர் சண்முகநாதன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.