உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எல்.ஐ.சி., முகவர்கள் தர்ணா

எல்.ஐ.சி., முகவர்கள் தர்ணா

சேலம் : அகில இந்திய எல்.ஐ.சி., முகவர்கள் சங்கத்தின், சேலம் கோட்டம் சார்பில், 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. கோட்ட தலைவர் முருகன் நாயனார் தலைமை வகித்தார். அதில் மத்திய அரசு, பாலிசிக்கான போனஸ் தொகையை உயர்த்தல்; காப்பீடு மீதான ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்தல்; குறைந்தபட்ச காப்பீடு தொகையை ஒரு லட்சம் ரூபாயாக உறுதிப்படுத்தல்; பாலிசி எடுப்பதற்கான வயதை, 65 ஆக உயர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். கோட்ட செயலர் சிவமணி, மாநில செயலர் ராஜேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை