உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உள்ளாட்சித்துறை ஊழியர்கள் கைது

உள்ளாட்சித்துறை ஊழியர்கள் கைது

சேலம்: சேலம் கோட்டை ஸ்டேட் வங்கி கிளை முன், சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்-சித்துறை ஊழியர்கள் சங்க தலைவர் தியாக-ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உள்ளாட்சி அமைப்புகளில் துப்பரவு பணிகள் உள்பட அனைத்து பணிகளிலும் தனியார் மயம் செய்யப்படுவதை தடுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதி படி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்-பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி-யுறுத்தி, கோட்டை பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் செய்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். சாலை மறியலில் ஈடுபட்ட, 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை