மாநகராட்சி வார்டுகளில் 27, 28, 29ல் பகுதி சபா கூட்டம்
சேலம், சேலம் மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும், பகுதி சபா கூட்டம், வரும், 27(நாளை), 28, 29ல் நடக்க உள்ளது.இதுகுறித்து சேலம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் அறிக்கை:மாநகராட்சி வார்டுகளில், மக்களுக்கு வழங்கப்படும் அத்யாவசிய சேவைகளை மேம்படுத்த, மக்கள் கருத்து, ஆலோசனை பெற்று, அதன் மீது தீர்வு காண வசதியாக, அனைத்து வார்டுகளிலும் சிறப்பு கூட்டம் நடக்க உள்ளது. இந்த பகுதி சபா கூட்டங்களுக்கு, கவுன்சிலர் தலைமையேற்பார். அக்., 27(நாளை), 28, 29ல் நடக்கும் கூட்டங்களில், மக்களின் அடிப்படை சேவை, சாலையோரங்களில் மரக்கன்று நட்டு பராமரித்தல், மழைநீர் வடிகால் துார்வாருதல், அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம், மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். அந்தந்த வார்டு மக்கள், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, ஆலோசனைகளை வழங்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.டவுன் பஞ்., வார்டுசேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டவுன் பஞ்சாயத்துகளில் உள்ள வார்டுகளில், உறுப்பினர் தலைமையில், அக்., 27, 28, 29ல் சிறப்பு வார்டு கூட்டம் நடக்க உள்ளது. மக்கள், குடிநீர் வினியோகம், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலை சேதம், பூங்கா, மழைநீர் வடிகால் பராமரிப்பு உள்ளிட்ட குறைகளை தெரிவித்து, ஆலோசனை வழங்கலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.