உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கர்நாடகாவில் நெல் அறுவடை நிறைவு தமிழகத்துக்கு திரும்பி வரும் இயந்திரங்கள்

கர்நாடகாவில் நெல் அறுவடை நிறைவு தமிழகத்துக்கு திரும்பி வரும் இயந்திரங்கள்

மேட்டூர்: கர்நாடகாவில் நெல் அறுவடை நிறைவால், தமிழகத்தில் இருந்து சென்ற அறுவடை இயந்திரங்கள் திரும்பத்தொடங்கியுள்ளன.கர்நாடகா மாநிலம் கே.ஆர்.எஸ்., அணை பாசன பகுதியில் உள்ள மைசூரு, மாண்டியா, சாம்ராஜ் நகர் மாவட்டங்கள், மத்திய கர்நாடகாவில் உள்ள தாவணகரே, ஷிமோகா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த செப்டம்பரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்ய தொடங்கினர். அதன் அறுவடைக்கு, தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, ஆத்துார் சுற்றுப்பகுதிகளில் இருந்து, 100க்கும் மேற்பட்ட நெல் அறுவடை இயந்திரங்கள், டிசம்பர் முதல் வாரம், மேட்டூர் வழியே கர்நாடகா புறப்பட்டன. தற்போது தாவணகரே, ஷிமோகா சுற்றுப்பகுதிகளில் நெல் அறுவடை முடிந்த நிலையில் தமிழகத்தில் இருந்து கொண்டு சென்ற அறுவடை இயந்திரங்கள், ஒரு வாரமாக மாதேஸ்வரன் மலை, பாலாறு, மேட்டூர் வழியே திரும்பத்தொடங்கியுள்ளன.இதுகுறித்து, நெல் அறுவடைக்கு சென்ற ஊழியர்கள் கூறுகையில், 'அறுவடை முடிந்ததால் அங்கு பணியில் ஈடுபடுத்திய அறுவடை இயந்திரங்கள், தமிழகம் வருகிறது. இங்கு சீரமைப்பு பணி முடிக்கப்பட்ட அறுவடை இயந்திரங்கள், வரும் நாட்களில் உளுந்துார்பேட்டையில் இருந்து திருப்பத்துார், ராணிப்பேட்டை, ஆம்பூர், சித்துார் வழியே ஆந்திரா மாநிலத்தில் நெல் அறுவடைக்கு செல்லும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை