உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மகா சண்டி யாக பெருவிழா

மகா சண்டி யாக பெருவிழா

ஓமலுார்: உலக நன்மை வேண்டி, ஓமலுார், கடை வீதியில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில், நேற்று முன்தினம், மகா சண்டி யாக பெருவிழா தொடங்கியது. அதில் திருவிளக்கு வழிபாடு, பூர்ணாஹூதி, கோ பூஜை, 64 யோகினி பூஜை, 64 பைரவ பூஜை, சண்டி தேவி கலசங்கள், 13 அத்யாய கலச பூஜை, சங்கு பூஜை நடந்தன. நேற்று, 13 அத்யாய தேவி மஹாத்மியம் ஹோமம் தொடங்கியது. அதில், 15 வேத விற்பன்னர்கள், மந்திரங்களை ஓதினர். 11 அடி ஆழ யாக குண்டம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து கன்னியா, சுவாசினி, சுமங்கலி, வடுக பூஜைகள் நடந்தன. மாலையில் மகா தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் வழிபட்டு, பின் அன்னதானத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை