உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.7 லட்சம் மோசடி செய்தவர் கைது

ரூ.7 லட்சம் மோசடி செய்தவர் கைது

சேலம், எம்.எல்.எம்., திட்டத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி, 7 லட்சம் ரூபாய் திருப்பி தராமல் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். 48. இவர், அதே பகுதியில் தள்ளுவண்டியில் குளிர்பானம் விற்பனை செய்து வருகிறார். இவரது மொபைல் போனுக்கு கடந்த மே, 31ல் சுரேஷ் என்பவர் எம்.எல்.எம்., ஆப் லிங்க்கை அனுப்பி இதில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என கூறியதோடு, மறுநாள் மாமாங்கத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் நடந்த எம்.எல்.எம்., திட்ட கூட்டத்துக்கும் அழைத்து சென்றுள்ளார்.அங்கு சுரேஷ், சென்னம்மா, ஷியாம், சென்னா ரவி ஆகியோரும் திட்டத்தில் முதலீடு செய்யுங்கள் பணத்துக்கு தாங்கள் பொறுப்பு என கூறியதை நம்பி, சீனிவாசன் மற்றும் அவரது மனைவி வங்கி கணக்குகளில் இருந்து பல தவணைகளில், 11 லட்சத்து, 65 ஆயிரத்து, 705 ரூபாய் முதலீடு செய்துள்ளார். இதன் மூலம் அவருக்கு, 4 லட்சத்து, 35 ஆயிரத்து, 689 ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது. மீதமுள்ள, 7 லட்சத்து, 29 ஆயிரத்து, 16 ரூபாயை தராமல் ஏமாற்றி விட்டனர். இது குறித்து சீனிவாசன் கடந்த ஜூலை, 29ல் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து, நேற்று குகை கருங்கல்பட்டி சாம்பலிங்கா நகரை சேர்ந்த சுரேஷ், 54, என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி