உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குடிக்க பணம் கேட்டு விவசாயி கண்ணில் கத்தியால் குத்தியவர் கைது

குடிக்க பணம் கேட்டு விவசாயி கண்ணில் கத்தியால் குத்தியவர் கைது

பெத்தநாயக்கன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம், வைத்தியகவுண்டன்புதுாரை சேர்ந்த, விவசாயி தங்கராசு, 58. அதே பகுதியில் உள்ள அவரது இளைய மகள் பாலாமணி தோட்டத்தில் உள்ள கூரை வீட்டில் வசிக்கிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி, 26, என்பவர், கடந்த, 29 இரவு, மது அருந்த பணம் கேட்டார். தங்கராசு மறுத்துவிட்டார். இதனால் கத்தியால் தங்கராசுவின் கண் உள்ளிட்ட சில இடங்களில், பழனிசாமி குத்தியுள்ளார். படுகாயம் அடைந்த தங்கராசுவை, மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஒரு கண்ணை இழந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் புகார்படி, ஏத்தாப்பூர் போலீசார், பழனிசாமியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ