உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அ.தி.மு.க.,வில் ஏராளமானோர் ஐக்கியம்

அ.தி.மு.க.,வில் ஏராளமானோர் ஐக்கியம்

சேலம், அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஓமலுார் எம்.எல்.ஏ., மணி ஏற்பாட்டில், அத்தொகுதிக்குட்பட்ட அ.மு.மு.க., ஓமலுார் நகர செயலர் சிவ இளங்கோ, மாவட்ட விவசாய அணி செயலர் தங்கதுரை, கோட்டமேட்டுப்பட்டி ஊராட்சி பா.ம.க., நிர்வாகிகள் சதீஷ்குமார், வேலன், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி வடிவேல் உள்பட ஏராளமானோர், அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி, நேற்று, ஓமலுாரில் உள்ள, அ.தி.மு.க., அலுவலகத்தில், பொதுச்செயலர், இ.பி.எஸ்., முன்னிலையில், நேற்று, அ.தி.மு.க.,வில் இணைந்தனர். தொடர்ந்து இ.பி.எஸ்., கட்சி துண்டு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அமைப்பு செயலர், செம்மலை, புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜமுத்து, முன்னாள் எம்.பி., சந்திரசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை