மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
11-Oct-2024
மேட்டூர்: ஓமலுார், தொளசம்பட்டி, மணக்காட்டூரை சேர்ந்தவர் வெங்க-டாசலம், 35. இவரது மனைவி பிரியா, 22. இவர்களுக்கு பிர-னிதா, 5, பிரவீணா, 3 என இரு பெண் குழந்தைகள் உள்ளனர். மேட்டூர், 600 மெகாவாட் அனல்மின் நிலையத்தில், ராதா இன்ஜி-னியரிங் நிறுவனம் நிலக்கரி கையாளும் பணியை மேற்கொள்கி-றது. அந்த நிறுவனத்தில் வெங்கடாசலம் உள்பட பலர் பணிபுரி-கின்றனர்.நேற்று முன்தினம் வெங்கடாசலம் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டார். காலை, 10:45 மணிக்கு பணியில் ஈடுபட்டிருந்த அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை சக ஊழியர்கள் மீட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்த-தாக தெரிவித்தனர். கருமலைக்கூடல் போலீசார் விசாரிக்கின்-றனர்.
11-Oct-2024